சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்களின் அட்டகாசத்தால் குடியிருப்பு வாசிகள் மற்றும் மாணவ, மாணவிகள், பெண்கள் அச்சத்துடன் உள்ளனர். நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. மக்களின் நலன்கருதி தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?