அடிப்படை வசதிகள் அவசியம்

Update: 2026-08-16 15:31 GMT

வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக மயானத்துக்கு செல்லும் பாதை, தண்ணீர் வசதி கூட முறையாக செய்யப்படவில்லை. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம், தகனம் செய்வதற்காக அங்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மயானத்துக்கான அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்