திருச்சி மாவட்டம் உறையூர் பாளையம் பஜார் சாலையில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை தெருநாய்கள் துரத்தி சென்று கடிப்பதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அதோடு, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களாலும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, தெருநாய்களை அப்புறப்படுத்தவும், பழுதடைந்த சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.