தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆனால், அங்கு ஸ்கேன் மற்றும் உடல் பரிசோதனை பிரிவில் போதிய ஊழியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே 24×7 அடிபடையில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஏராளமானோர் பயன்பெறுவார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்ப்பார்களா?
கார்த்திகேயன், தாராபுரம்.