தீத்திப்பாளையம் அருகே விவேகானந்தர் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. அவை பகலிலும், இரவிலும் கூட்டம், கூட்டமாக சாலைகளில் உலா வருகின்றன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வார்கள், நடந்து செல்பவர்கள் என அனைவரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் சாலைகளில் செல்லவே பலரும் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.