விளைநிலங்களில் மது பாட்டில்கள்

Update: 2026-05-03 10:19 GMT

பேரூர் அருகே ரங்கா நகர், ஹைடெக் சிட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதன் அருகில் விளைநிலங்களும் உள்ளன. இங்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் வரும் நபர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை தூக்கி வீசிவிட்டு செல்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் வீசுகின்றனர். அத்துடன் மது பாட்டில்களை உடைத்து விடுவதால், கால்நடைகள் மற்றும் அங்கு வந்து செல்லும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு போலீசார் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்