பராமரிக்கப்படாத கழிப்பறை

Update: 2026-04-26 18:29 GMT

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நரம்பியல் மருத்துவ பிரிவு கட்டிட 2-ம் தளத்தில் நோயாளிகளுக்கான அறைகளில் மின்விசிறிகள் சரிவர இயங்குவது இல்லை. அத்துடன் அங்குள்ள கழிப்பறையும் சுகாதாரமாக இல்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படும் சூழல் உள்ளது. குறிப்பாக கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால், மாதக்கணக்கில் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிப்பறையை முறையாக பராமரிக்கவும், மின்விசிறிகள் முறையாக இயங்கவும் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்