சாலையில் ஆபத்தான தடுப்பு

Update: 2026-04-26 17:22 GMT

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நொய்யல் கரையோரங்களில் மாநகராட்சி சார்பில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருப்பூர் நிட்மா சாலையில் இருந்து மணியக்காரம்பாளையம் வரையில் நொய்யல் கரையோரம் அமைக்கப்பட்ட சாலையில் ஆபத்தான முறையில் குடிநீர் குழாய்க்கான சுவர் அமைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும், பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவற்றை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்