தூத்துக்குடி 50-வார்டு சிவந்தாகுளம் நடுத்தெரு பள்ளமாக இருப்பதால் கனமழை பெய்யும்போது மழைநீர் வடிய இடம் இல்லாமல் தேங்குகிறது. நீண்ட நாட்கள் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே தெருவில் மழைநீர் தேங்காமல் எளிதில் வடிந்து செல்லும் வகையில் வடிகால் வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.