பொதுமக்கள் அவதி

Update: 2026-04-26 15:06 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆறுரோடு கிராமம் உள்ளது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் உள்ளதால் பிரிவு ரோடு ஏற்படுத்தி ஆறுரோடு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுரோடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் கரூருக்கு செல்ல ஆறுரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று பஸ் ஏறி சென்று வருகின்றனர். ஆனால் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் பஸ்கள் ஆறுரோடு பஸ் நிறுத்தம் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக செல்வதில்லை. மாறாக பஸ் நிறுத்தத்திற்கு நெடுந்தோரத்திற்கு முன்பு மேம்பாலத்தில் நின்று செல்கிறது. இதனால் மேம்பாலத்தில் பயணிகள் இறங்கி நெடுந்தூரம் நடந்து ஆறுரோடு பகுதிக்கு செல்கின்றனர். இதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் பிரிவு ரோடு வழியாக சென்று ஆறுரோடு பகுதியில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்