தரமான சீரமைக்க வேண்டும்

Update: 2026-04-26 06:53 GMT

குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் பல இடங்களில் சேதமடைந்து காணப்பட்டது. தற்போது அந்த சாலை சீரமைக்கப்பட்டு காணப்படுகிறது. ஆனால், சாலையில் போடபட்ட பழைய தார்களை முறையாக அகற்றி விட்டு புதிய தார்சாலை அமைக்காமல், பழைய தாரின் மீதே போட்டுள்ளனர். இதனால் சாலையின் உயரம் அதிகமாகவதுடன், தரமற்று போடப்படுள்ளது. இதனால் ஒரு சில மாதங்களில் புதிதாக போடப்பட்ட தார்சாலை சேதமடைந்து ஆங்கேங்கே பெயர்ந்து மீண்டும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜஸ்டின் ஜாஸ்பர், குலசேகரம்.

மேலும் செய்திகள்