திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரிய களக்காட்டூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்து அதன் சுவர் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்தக் கட்டிடம் பெரிய களக்காட்டூர் சின்ன களக்காட்டூர் மற்றும் ஜே.எஸ்.ராமாபுரம் ஆகிய மூன்று கிராமங்கள் மக்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலக கட்டிடத்தை சரிசெய்து தரவேண்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.