மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?