பொற்றையடியில் இருந்து மந்தாரம்புதூர் செல்லும் சாலையோரம் புத்தனார் கால்வாய் பாய்கிறது. இந்த வைகுண்டபதி பகுதியில் கால்வாய்யில் சிலர் ஆக்கிரமிக்கும் விதமாக மண் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழை நேரங்களில் கால்வாயில் தண்ணீர் வடிந்தோட முடியாத நிலை ஏற்படுவதுடன், குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயில் கொட்டப்பட்டுள்ள மண் மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றவுடன், சேதமடைந்த கால்வாய் கரைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹெப்சிபாய், பொற்றையடி.