குழித்துறை சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை சரியாக மூடப்படாமல் காணப்படுகிறது. மேலும், அந்த இடத்தில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் இரும்பு கம்பிகள் வெளியே நீண்டபடி காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மழைநீர் ஓடையை முறையாக சீரமைத்து மூடிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.