பாதியில் நிற்கும் கழிவறை பணிகள்

Update: 2026-03-01 14:49 GMT

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த கழிவறை பராமரிப்பு பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாதங்கள் ஆகியும் பணிகள் நடைபெறாமல் உள்ளதால் சிலர் அங்கேயே இயற்கை உபாதைகளை கழித்து செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கழிவறை பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்