தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2026-03-01 14:10 GMT

நெல்லை பேட்டை சாஸ்திரிநகர் அருகில் உள்ள பீம்நகரை அடுத்த பெத்தேல்நகரில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதன் அருகில் உள்ள பயன்பாடற்ற நூற்பாலையில் இருந்து ஏராளமான விஷஜந்துகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து உலாவி வருகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் அங்குள்ள புதர் பகுதியில் சமூக விேராதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே பெத்தேல்நகரில் தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்