அகற்றப்படாத மரத்தின் கிளை

Update: 2026-03-01 12:38 GMT

தாராபுரம் நாச்சிமுத்துபுதூர் முதல் வீதியில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளை அந்த வழியாக சென்ற மின்சார வயரில் உரசும் நிலையில் இருந்தது. இதை மின்வாரியத்தினர் வெட்டி தெருவில் போட்டனர். ஆனால் அந்த கிளைகள் அப்புறப்படுத்தவில்லை. மேலும் மரக்கிளைகள் காய்ந்துள்ளதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக மரக்கிளை, குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்