சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் ஒன்றை ஒன்று தாக்கி சண்டையிட்டு கொள்வதுடன், சாலையில் செல்பவர்களையும் அச்சுறுத்துகின்றன. மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொடர் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வருமா?