பயன்படாத கழிவறை

Update: 2026-02-22 16:45 GMT

வெண்ணந்தூர் பேரூராட்சியில் 6-வது வார்டில் ஆண்கள் கழிவறை உள்ளது. இதன் அருகே 2 அங்கன்வாடி மையங்களும், அரசு தொடக்கப்பள்ளியும் உள்ளன. இந்தநிலையில் கழிவறை முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அங்கு மது அருந்தியும், தவறான செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே இதற்கு கழிவறையை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்