புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2026-02-22 16:05 GMT
நடுவீரப்பட்டு சிவன் கோவில் எதிரே உள்ள குளம் பராமரிப்பின்றி அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் மாசசைடயும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்த செய்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி தூர்வாரி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்