விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கென கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இலவச கழிப்பறை கட்டிடமாக மாற்றித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.