ராசிபுரம் அருகே ஆண்டகலூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தோனமேடு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலையின் இருபுறங்களிலும் புளியமரம் அடர்த்தியாக உள்ளதால் மின்விளக்குகளின் வெளிச்சம் சாலைக்கு போதுமானதாக இல்லை. எனவே சாலையை ஆக்கிரமித்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தலாமே!