பொதுமக்கள் சிரமம்

Update: 2026-02-08 16:49 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள ரேஷன் கடையில் 750-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி இருந்தனர். இந்த ரேஷன் கடை திங்கள் முதல் சனி வரை வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 3 நாட்கள் மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாரத்தில் ஆறு நாட்களும் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்