சிதம்பரம் அடுத்த உசுப்பூாில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க பாய்வதால் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.