விருதுநகர் மாவட்டம் மத்தியசேனை கிராமம், காரிசேரி பஞ்சாயத்து பயணிகள் நிழற்குடை மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் குறிப்பாக பெண்கள், முதியோர்கள் இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் வெயில் மற்றும் மழையில் வெளியே காத்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி நிழற்குடையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?