பழனி சண்முகநதி பாலத்தின் அருகிலும், ஆற்று பகுதியிலும் இறைச்சிக் கழிவுகளை மர்ம நபர்கள் வீசிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சண்முகநதியும் மாசடைகிறது. எனவே சண்முகநதியில் வீசப்பட்ட இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்துவதுடன், அவற்றை வீசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.