புவனகிரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நீண்ட நாட்களாக அரசு வாகனங்கள் செயல்படாமல் நிற்கின்றன. இதனால் அந்த வாகனங்கள் துருப்பிடித்து மக்கி வீணாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வாகனங்களை விரைந்து சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.