திண்டிவனத்தில் உள்ள ரவுண்டானா மேம்பாலத்தில் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதில் திருப்பதி மற்றும் ஒசூர் செல்லும் தூர விவரம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகனஓட்டிகள் அந்த தவறான தகவல் பலகையால் கடும் அவதியடைகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் பலகையை சரியாக திருத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.