வேகத்தடை வேண்டும்

Update: 2026-02-01 15:06 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து மாதாங்கோவில்பட்டி வழியாக சிவகாசி செல்லும் சாலையில் வேகத்தடைகள் போதிய அளவில் இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் வேகமாக செல்கின்றனர். ஆதலால் அப்பகுதி சாலையை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியோர் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதியில் போதுமான வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்