பாப்பாரப்பட்டியில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையின் மேற்கு பகுதியில் பாப்பாரப்பட்டி ஏரி அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி சீரமைக்கப்பட்ட இந்த ஏரியின் பெரும் பகுதியை தற்போது ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் இந்த ஏரியில் மழைநீரை கணிசமாக தேக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை முழுமையாக அகற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.