தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த லிங்கநாயக்கனஅள்ளி கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். இதனால் மழைக்காலங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து லிங்கநாயக்கனஅள்ளி கிராமத்தில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.