திறக்கப்படாத காத்திருப்போர் கூடம்

Update: 2026-02-01 13:33 GMT

பர்கூர் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக தினசரி 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இவர்கள் ஓய்வெடுக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டது. தற்போது வரை இந்த காத்திருப்போர் கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் வெயிலிலும் மழையிலும் பள்ளி, கல்லூரி மாணவிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் காத்திருப்போர் கூடத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்