தெருநாய்கள் தொல்லை

Update: 2026-02-01 13:29 GMT

ஓசூர் புதுவசந்த் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள், காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேர பணிக்கு செல்பவர்கள் தினமும் தெருநாய்கள் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எப்போதுதான் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவார்களோ?

மேலும் செய்திகள்