நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பட்டர்புரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து தண்ணீர் கசிகின்றது. மேலும் முட்செடிகளும் அடர்ந்து வளர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அங்குள்ள சமுதாய நலக்கூடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகில் நடுநிலைப்பள்ளி உள்ளது. எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.