நாய்களால் விபத்து அபாயம்

Update: 2026-01-25 18:00 GMT
ரிஷிவந்தியம் அடுத்த ஈருடையாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் உள்பட அனைவரையும் விரட்டி கடிக்கப்பாய்கின்றன. மேலும் வாகனங்களில் செல்பவர்களையும் கடிக்க விரட்டுகின்றன. இதனால் சில சமயங்களில் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்