புதர் மண்டிய நிழற்குடை

Update: 2026-01-25 17:08 GMT

ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அருகே கலர் என்ற பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள பயணிகள் நிழற்குடை சரியான பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். புதரை அகற்றி நிழற்குடையை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்