மதுரை மாவட்டம் பாசிங்காபுரம்-அலங்காநல்லூர் முக்கிய சாலையில் தெருவிளக்குகள் வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிரே வரும் கனரக வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தால் அவ்வப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.