நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி வழியாக பழனிக்கு ஏராளமானபாதயாத்திரையாக சென்றுகொண்டு இருக்கின்றனர். இவர்களுக்காக நத்தம்-திண்டுக்கல் சாலையில் பேவர் பிளாக் கற்கள் மூலம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நடைபாதையில் பல இடங்களில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் நடைபாதையை சிலர் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள், புதர்களை விரைந்து அகற்ற வேண்டும்.