நரியூத்து ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் அங்கு கொட்டப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பை கிடங்கு கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.