உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள பொதுக்கழிவறையில் கடந்த சில நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர்நிரப்ப முடியவில்லை. இதனால் கழிவறை கடந்த சில நாட்களாக செயல்படாமல் உள்ளது. பொதுமக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கழிவறைக்கான மின் இணைப்பு பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.