நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய வீதிகள், சாலைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் நடந்து, வாகனங்களில் செல்பவர்களை துரத்தி, துரத்தி தெருநாய்கள் கடிக்கின்றன. சிலர் வாகனங்கள் இருந்து விழுந்து காயம் அடைந்து, தெருநாய்க்கடியால் அவதிப்பட்டும் வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.