பஸ் படிக்கட்டால் அபாயம்

Update: 2026-01-25 14:15 GMT

காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையில் 4 வழிச்சாலை காணப்படுகிறது. அங்கு விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேகத்தடையின் உயரம் கூடுதலாக இருப்பதால் அவ்வழியே செல்லும் பஸ் படிக்கட்டுகள் அந்த வேகத்தடுப்பின் மீது மோதி செல்கிறது. இதனால் படிக்கட்டில் நின்று செல்லும் பயணிகள் கீழே தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள வேகத்தடுப்பின் உயரத்தை குறைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்