நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் கட்டிடம் மிகவும் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதற்காக பல இடங்களை தேர்வு செய்து இன்னும் புதிய கட்டிடம் கட்ட காலதாமதம் ஆகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு விரைந்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமா?