சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்திணாபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களையும், குழந்தைகளையும் துரத்தி கடிக்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவில் மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.