சென்னை அடையாறு பகுதியில் வெங்கடரத்தினம் நகர் பிள்ளையார் கோவில் அருகில் உடற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், வாலிபர்கள் என பலர் உயற்பயிற்சி செய்து வந்தனர். செயல்பாட்டில் இருந்த இந்த உடற்பயிற்சி கூடம் கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்யமுடியாக நிலைமை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடற்பயிற்சி நிலையத்தை திறக்க வேண்டும்.