பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கழிவறை உள்ள இடத்தின் மேற்புறத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து செங்கற்கள் வெளியே தெரிகின்றது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த சுவர் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.