சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2026-01-18 17:16 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரதான சாலையான மதுரை சாலை, முடங்கியார் சாலை, மாடசாமி கோவில் தெரு ஆகியவற்றில் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்