புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கடைவீதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை மேய்ச்சலுக்கு வரும் ஆடுகளை விரட்டிக் கடித்துக் குதறுகின்றன. மேலும் பொதுமக்களையும் விரட்டி அச்சுறுத்தி வருகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.