பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் பஸ் நிலையப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.